படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்தும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து, டிச. 31 -ஆம் தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை பொருத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகைப் பெற விரும்பும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும், 23.07.2019 அன்று 40 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித் தொகை பெற விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காட்டி, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூரில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200,
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300,
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 400,
பட்டப்படிப்பு முடித்துவர்களுக்கு ரூ. 600,
மாற்றுத் திறனாளிகளுக்கு
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 600,
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 750,
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Application Form
Application Form For Normal :
https://scholarships.net.in/uploads/pdf2019/38339-Nor.pdf
Application Form For Differently Abled :
https://scholarships.net.in/uploads/pdf2019/38339-Dis.pdf
Contact Details:
Directorate of Employment and Training,
Alandur Road, Thiru-vi-ka Industrial Estate,
Guindy, Chennai – 600032.
Call: 044-22501002, 044-22501006, 044-22500900, 044-22500911