Ayalan movie official collection details: ஏலியன் கான்செப்டில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் கடந்த 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியானது. இந்த ரெண்டு படங்களுக்கு இடையே தான் வசூலில் கடும் போட்டி நிலவிய நிலையில், இப்போது அயலான் படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தற்போது வரை அயலான் படம் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருப்பதாக படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கிட்ஸ் முதல் 60’ஸ் வரை, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனுக்கு தான் நிறைய ஃபேன்ஸ் இருப்பதால் இந்த வருஷ பொங்கலுக்கு அயலான் செம ட்ரீட் ஆக அமைந்தது.
அயலான் அதிகாரப்பூர்வ வசூல் விபரம்
அதே சமயம் துப்பாக்கி சத்தமும், ரத்தகளரியும் நிறைந்த தனுஷின் கேப்டன் மில்லர் படம் இளசுகளுக்கு பிடித்தது போல் பக்கா ஆக்சன் படமாக அமைந்துள்ளது. இதனால் இதன் வசூலும் சக்கை போடு போடுகிறது. தற்போது வரை கேப்டன் மில்லர் 70 கோடி வசூலை கடந்துள்ளது.
அப்படி என்றால் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலானை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பின்னுக்குத் தள்ளி உள்ளது. கூடிய விரைவில் கேப்டன் மில்லர் படக் குழுவும் உலக அளவில் எவ்வளவு கலெக்ஷன் ஆகி இருக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரம்