சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விருப்பப்படி அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக்கொள்ள முடியும். மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும் ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வாங்கிக்கொள்ள முடியும்.
இதுவரை 7 இலட்சத்து 25 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர். இதில் இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படாத மீதம் உள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 1 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டன. இந்த தாமதங்கள் களையப்பட்டு.. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொண்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படாமல் போனதற்கு காரணம் லோக்சபா தேர்தல். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணிகளை செய்ய முடியவில்லை.
இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகளை கொடுக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யவில்லை என்று புகார்கள் உள்ளன.
புதிய முறை: இந்த நிலையில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- புதிய முறைப்படி ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
- உதாரணமாக திருமணம் ஆகி, பெயர் நீக்கி புதிய ரேஷன் பெற.. அவர்கள் திருமண சான்றிதழ் கொடுக்க வேண்டும் .
- இறப்பு காரணமாக பெயர் நீக்கம் செய்ய சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
- தவறாக நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க நேரடி சோதனை செய்யப்பட வேண்டும். நேரடியாக சோதனை செய்து.. அந்த நபர் உள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பெயர் சேர்க்கப்படும்.