சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும். பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் ஹீரோவாக நடிப்பார். பெரிய நிறுவனம் தயாரிக்கும். எனவே, அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருக்கும். அப்படி வெளியான திரைப்படம்தான் இந்தியன் 2.
1996ம் வருடம் வெளியான இந்திய படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியானது. பல வருடங்கள் கழித்து 2ம் பாகம் உருவானதாலும், விக்ரம் எனும் மெகா ஹிட் கொடுத்த கமல் இந்தியன் 2வில் நடித்ததாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.
வழக்கமாக ஷங்கர் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார். ஆனால், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இதுவே பலருக்கும் பிடிக்கவில்லை.
படம் வெளியாகி ரசிகர்களுக்கும் பிடிக்காமல் போனது. படத்தின், கதை மற்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. அதோடு, கமல்ஹாசனின் மேக்கப்பும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த படத்திற்கு பல இடங்களுக்கும் போய் புரமோஷன் செய்தார் கமல். ஆனாலும் ஒன்னும் பலனில்லை. படம் வெளியான அன்றே பல தியேட்டர்களில் கூட்டம் இல்லை. படம் வெளியாகி 2 நாட்களில் பல தியேட்டர்களில் 20 பேர் மட்டுமே இருந்தனர்.
ஆனாலும், ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை, தமிழக வெளியீட்டு உரிமை மற்றும் மற்ற மொழி உரிமைகள் எல்லாம் சேர்த்தால் லைக்காவுக்கு நஷ்டமில்லை என சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது லைக்காவுக்கு தலையில் இடி விழுந்திருக்கிறது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், படத்தில் ரிசல்ட் சரியில்லை. அவசரப்பட்டு அதிகவிலை சொல்லிவிட்டோமே என கணக்குப்போட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் வேற மாதிரி யோசித்து செக் வைத்துவிட்டது. பொதுவாக படம் ரிலீஸாகி 3 நாட்களில் படத்தின் காப்பியை ஓடிடி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அதை செய்வதில்லை. ஓடிடி நிறுவனங்களும் அதை கண்டுகொள்வதில்லை. இந்தியன் 2 படத்தையும் அப்படி கொடுக்கவில்லை. அதையே காரணமாக காட்டி ‘நீங்கள் பிரிண்ட் கொடுக்கவில்லை எனவே 125 கோடி தரமுடியாது. 60 கோடிதான் கொடுப்போம்’ என சொல்லிவிட்டதாம் நெட்பிளிக்ஸ்.
இதனால்தான் எப்பவுமே அவர் டார்லிங் இந்தியன் 2 படத்தின் டிஐ வேலையை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம்தான் செய்து கொடுத்தது. அந்த வேலையை செய்ததில் 2.50 கோடி பாக்கி வைத்திருக்கிறது லைக்கா. அந்த பணத்தை கொடுக்காமல் ஓடிடிக்கு பிரிண்டை கொடுக்க கூடாது என அந்த நிறுவனம் செக் வைத்துவிட்டது. அதனால்தான் படம் வெளியாகி 3ம் நாள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு பிரிண்ட் கொடுக்க முடியவில்லையாம்.
தற்போது 2.5 கோடியை பார்த்து 65 கோடியை இழந்திருக்கிறது லைக்கா நிறுவனம்!…