Uncategorized

இனி ATM-க்கு போகாமலேயே பணம் எடுக்கலாம்..! எப்படி?

கொரோனா வைரஸ் இன்று வரை உலக வர்த்தகம் மற்றும் வியாபாரங்களின் முகத்தை தாறுமாறாக மாற்றிக் கொண்டு இருக்கிறது.

அப்படி பல புதிய மாற்றங்களை இந்திய வங்கித் துறைகளும் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.

சமூக இடைவெளி கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மக்கள் பணத்தை எடுக்க இப்போது வரை வெளியே வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஐடியா

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய ஐடியாவை நேற்று மே 05, 2020 முதல் களமிறக்கி இருக்கிறது. நாம் வழக்கமாக டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட் வழியாக, அரிசி பருப்பு சோப்பு சீப்பு கண்ணாடி… போன்றவைகளை வாங்கும் கடைகளில் இருந்தே, மக்கள் வங்கிக் கணக்கில் இருந்து (Cash) பணத்தை பெற்றுக் கொள்ளும் விதத்தில் ஒரு வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கடைகள்

இந்த புதிய வசதியின் படி, சாதாரணமாக வர்த்தகம் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் கடைகளில் இருக்கும், யூபிஐ டெர்மினல்களைப் பயன்படுத்தி டெபிட் கார்ட் அல்லது யூபிஐ வழியாக, வாடிக்கையாளர்கள் கடை உரிமையாளர்களுக்கு பணத்தை செலுத்திவிட்டு, கடை உரிமையாளர்களிடம் இருந்து ரொக்கத்தை (Cash) பெறலாம் எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

எந்த கார்டுகள்

இந்த புதிய பி ஓ எஸ் டெர்மினல்கள் வழியாக டெபிட் கார்ட் போன்ற ப்ரீபெய்ட் கார்ட்களைப் பயன்படுத்தலாம். அதே போல யூபிஐ வழியாகவும், பி ஓ எஸ் டெர்மினல் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்து ரொக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். க்ரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, பணத்தை எடுக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

எவ்வளவு எடுக்கலாம்

மத்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்திருக்கும் இந்த புதிய திட்டத்தின் கீழ், டயர் 1 & டயர் 2 நகர் பகுதிகளில் ஒரு ஏடிஎம் கார்டுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வரை இப்படி பணத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் மற்ற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு டெபிட் கார்டுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை இப்படி பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.

கடைக்காரர்களுக்கு என்ன

இப்படி பி ஓ எஸ் டெர்மினல்கள் வழியாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டு, பணத்தை ரொக்கமாக கொடுக்கும் கடைக்காரர்கள், அதிகபட்சமாக, செய்யப்படும் பணப் பரிமாற்றாத்துக்கு, ஒரு சதவிகிதம் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

அனுமதி

கடைகளுக்கு பி ஓ எஸ் டெர்மினல்கள் கொடுத்து இருக்கும் வங்கிகளே, கடைக்காரர்களின் பின் புலத்தை சோதித்துவிட்டு, இப்படி பி ஓ எஸ் டெர்மினல்கள் வழியாக, மக்களுக்கு பணத்தை வழங்க அனுமதி கொடுக்கலாம். கடை உரிமையாளர்கள், இந்த சேவை இருப்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்த சேவைக்கு வசூலிக்க இருக்கும் 1 % கட்டணத்தையும் குறிப்பிட வேண்டும் என்கிறது ஆர்பிஐ.

பொருள் வாங்கனுமா

இப்படி பி ஓ எஸ் டெர்மினல்கள் வழியாக கடைக்காரர்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்து விட்டு, (Cash) ரொக்கத்தை வாங்கிக் கொள்ள, ஏதாவது பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டுமா..? என்கிற கேள்விக்கு தெளிவாக, எந்த பொருளும் வாங்க வேண்டாம் என பதில் கொடுத்து இருக்கிறது ஆர்பிஐ.

ரசீது

பி ஓ எஸ் டெர்மினல்கள் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்து, (Cash) ரொக்கத்தை கொடுப்பதற்கு கூட, கடைக்காரர்கள், தனியே ஒரு ரசீதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

ஏடிஎம் கூட்டம்

இந்த புதிய யோசனையால் வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கி கிளைகளில் பணத்தை எடுக்க, வங்கி வாடிக்கையாளர்கள் கூடும் கூட்டம் ஓரளவுக்காவது கட்டுப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த நல்ல நோக்கத்துடன் தான், மத்திய ரிசர்வ் வங்கி இப்படி ஒரு புதிய யோசனையை செயல்படுத்தி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com