நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இன்று நாகர்கோவில் வந்த மோடி, மாநில உரிமைக்காக போராடிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார். ஒருபுறம் தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களக்கான உரிமைகளை பறித்துக்கொண்டு, மறுபுறம் மாநில உரிமைகளுக்காக போராடிய அண்ணாவுக்கு தலைவணங்குவது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டுக்கு ஆபத்து மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதுவும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில். இதற்கு முன்னரும் இப்படித்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர் காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, பின்னர் தொகுதி மறுவரையறையை அமல்படுத்த வேணடும் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், 1971 மற்றும் 2001 என இரண்டு முறையும் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும்போது, வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கவில்லை. எனவே, 25 ஆண்டுகள் டைம் கொடுக்கப்பட்டது. 2026ம் ஆண்டுடன் இந்த கெடு முடிவடையும் நிலையில் இப்போதும் மக்கள் தொகையை வட மாநிலங்கள் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.
மக்கள் தொகை எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாதவரை, பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்காத மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அவசர கதியில் அமல்படுத முயன்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பலம் நாடாளுமன்றத்தில் குறையும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்காக குரல் கொடுத்து வரும் இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவில் ரோடு ஷோ மேற்கொள்ள வந்திருக்கிறார்.
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை?
மோடியின் செயல் முன்னதாக அவர், அண்ணா சிலைக்கு மலர்தூவி தலை வணங்கி மரியாதை செலுத்தியிருந்தார். இதுதான் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடிய அண்ணாவை வணங்கிக்கொண்டே, தொகுதி மறுவரையறை போன்ற தமிழ்நாட்டு விரோத நடவடிக்களை எப்படி மேற்கொள்ள முடிகிறது? என திமுவினர் கேள்வி எழுப்பியிருக்கறது.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More