தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்; ஓட்டுநர் உரிமம் இலவசம்.
Free driving licenses : தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் முதல் உயர்கல்வி படிப்பவர்கள் வரை கல்வி உதவி தொகை, இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் வேலை தேடும் இளைஞர்களுக்காக அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி வருகிறது.
சொந்த தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்காக பயிற்சியும் அளித்து கடன் உதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து இலவசமாகவே ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற விண்ணப்பங்கள்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை போக்குவரத்து நிறுவனமும், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கீழ்கண்ட 16 மையங்களில் ஆண், பெண் இருபாலருக்கும். கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற விண்ணப்பங்கள், வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்படும் மையங்கள்
கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர்
விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்
Tamil Nadu government has started distributing applications to get free heavy duty driving licenses KAK
விண்ணப்பிக்க வேண்டியது எப்படி.?
இந்த இலவச பயிற்சியில் சேர விரும்புபவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skill wallet/ என்ற இணையதள முகவரியில் உள்நுழைந்து கொடுக்கப்பட்டுள்ள தொழில்துறைகளில் Automotive என்ற துறையை தேர்ந்தெடுத்து அதில் உள்ள தேடல் படிப்புகளில் வர்த்தக வாகன ஓட்டுநர் பயிற்சி நிலை IV” என்ற பாடதிட்டத்தை தேர்ந்துதெடுத்து விண்ணப்பிக்கலாம்.
அதில் விரும்பிய பயிற்சி மையத்தை தேர்ந்தெடுத்து ஆதார் எண் மூலம் தகவல்களை பகிர்ந்து விண்ணப்பிக்கபட வேண்டும். கைபேசி மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ.சேவா மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Upskill yourself and get placed.
Course: Commercial Vehicle Driver Level – IV
For More Details, visit
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1655
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More