இந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்தால் உங்கள் முழு பணமும் திரும்பக் கிடைக்கும்
நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கியின் அலட்சியம் அல்லது தவறு காரணமாக ஏற்பட்ட இழப்பை வங்கி ஈடுசெய்ய வேண்டியிருக்கும். 2017-18ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மோசடி நடந்த 3 நாட்களுக்குள் வங்கியில் புகார் அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வாடிக்கையாளருக்கு முழு இழப்புக்கும் ஈடுசெய்யப்படும். 4 முதல் 7 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால், வாடிக்கையாளருக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். புகார் அளித்த 7 நாட்களுக்குப் பிறகு, இழப்பு வங்கியின் கொள்கையைப் பொறுத்தது. ஆகவே உடனடியாக வங்கியைத் தொடர்புக் கொண்டு புகார் அளியுங்கள்.