பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசின் அசத்தலான திட்டம்
உத்யோகினி திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கும் உதவும் வகையில் உள்ள சிறந்த திட்டமாக இருக்கின்றது. உத்யோகினி திட்டம் என்பது கிராமப்புற மற்றும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் உள்ள பெண்கள் தொழில் செய்வதற்கு மானிய கடனை வழங்கும் திட்டமாகும். பெண்கள் சுயமாக தொழில் செய்ய நம்பிக்கை கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பெண்களுக்காக கடன் வழங்கும் திட்டம்:
பெண்கள் சுயமாக சம்பாதிக்க பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் உத்யோகினி திட்டம். இந்த திட்டமானது தொழில் முனைவோர் தொழில் தொடங்க தேவையான நிதி உதவியை பெற ஊக்குவிக்கிறது. பெண்கள் தொழில் செய்வதற்கு இந்த கடனை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் தங்கள் தொழிலை தொடங்க பயன் உள்ளதாக இருக்கும்.
அரசு வங்கிகள் உள்பட நிதி நிறுவனங்களுக்கு சமூகத்தின் பல்வேறு பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவெடுத்துள்ளது.
கடன் தொகை:
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம் சிறப்பு பிரிவினருக்கு அதிக மானியம் அல்லது வட்டியில்லா கடனை வழங்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
தகுதி:
18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். குடும்ப வருமானம் 2 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடையாது.
பொதுவாக ஒரு கடனை வாங்குவதற்கு செயலாக்க கட்டணம்( processing fees) இந்த திட்டத்திற்கு கிடையாது.
ஏழை பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனை பெற முடியும். இத்திட்டத்தின் மூலமாக 88 சிறுதொழில்கள் மற்றும் விவசாய துறையில் பெண்கள் தொழில் செய்பவர்களுக்கு வட்டியில்லா கடனை வழங்குகிறது.
மானியம் எவ்வளவு.?
கடன் தொகையில் 30% வரை மானியம் கிடைக்கிறது. இதன் மூலம் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள கஷ்டத்தை குறைகிறது.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- பிறப்பு சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- வங்கி புத்தகத்தின் நகல்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்டத்தின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.