நிபுணர் குழு இன்று தனது பரிந்துரையை வழங்க இருக்கும் நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மக்கள் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, 20-ந் தேதி (இன்று) முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி சில நிபந்தனைகளுடன் ஊரக பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம் என்றும், வேளாண்மை பணிகள் நடைபெறலாம் என்றும், கிராமப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தச்சு தொழிலாளர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், மோட்டார் பழுதுபார்ப்போர், கம்ப்யூட்டர் பழுது பார்ப்போர் இன்று முதல் தங்கள் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறைகளை தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், இந்த நடைமுறைகள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
கட்டுப்பாடுகள் நீடிக்கும்
மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் இன்று தங்களுடைய பணிகளை தொடங்கலாம் என்று ஆவலோடு காத்து இருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், ஊரடங்கு குறித்து அரசின் உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று அறிவித்து உள்ளது. அதாவது தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு கடந்த 15-ந் தேதி வெளியிட்ட ஆணையின்படி ஏப்ரல் 20-ந் தேதிக்கு (இன்று) பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என தெரிவித்து இருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.
இந்த குழு தன் முதல் கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதல் கட்ட ஆலோசனைகளை (பரிந்துரைகள்) முதல்-அமைச்சரிடம் 20-ந் தேதி (இன்று) தெரிவிக்க உள்ளது.
இந்த குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்- அமைச்சர் முடிவெடுக்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இன்று அறிவிக்கிறார்
ஊரடங்கில் எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கிறார். அதைப்பொறுத்து எந்தெந்த தொழிற்சாலைகள், தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்பது தெரியவரும்.
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More