இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி மருத்துமனைக்குள் நுழையும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக அஜித் மருத்துவனைக்குச் சென்றார் பலரும் கேட்டுள்ளார்கள்.
இதுகுறித்து இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனையில் தன் உடலைப் பரிசோதித்துக் கொள்வது அஜித்தின் வழக்கம். அதன்படி நேற்று மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து அஜித் பரிசோதனை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு தகவலின்படி, அஜித்தின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைக் காண அஜித் வந்ததாகவும் கூறப்படுகிறது.