பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. மேலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனிடையே கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டுள்ள கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத்தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க யுஜிசி பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “பல்கலைக்கழகங்களில் செப்.15க்கு பிறகு இறுதி பருவத் தேர்வு நடைபெறும். இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருங்கள். இறுதி பருவத்தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வு மையங்களில் விரைவில் விவரம் வெளியிடப்படும். பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 7ந் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்