Advertisement
Categories: Uncategorized

கூட்டுறவு செயலி மூலம் ரூ. 75 லட்சம் வரை வீட்டுக் கடன்… விண்ணப்பிப்பது எப்படி?

கூட்டுறவுத் துறையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, ‘கூட்டுறவு’ (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

Kooturavu App Overview !! தமிழக அரசு கூட்டுறவுத் துறையில் புதிய அறிமுகம் | New App Launch !!

App Link : https://play.google.com/store/apps/details?id=com.coop.coop

இச்செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகைக்கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொது மக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில், இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், கடன் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணையவழி சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியில் சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த ‘கூட்டுறவு செயலி’ மூலம் பொதுமக்கள் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாகவும், கடன் தவணைக் காலம் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலும் இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்டுறன பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ‘கூட்டுறவு’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியை திறந்து, வங்கி சேவை பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து கடன் தகவல் பொத்தானை அழுத்த வேண்டும். அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால் நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூ தியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனை வோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு டன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன்,கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இந்த பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
வீட்டுக் கடன் பெற விரும்புவோர் அதனை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்ட உடன், கூட்டுறவு சங்கம் தொடர்பான (மாவட்டம், வட்டம், சங்கம்) விவரங்கள், வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

admin

Recent Posts

இனி ஒருவரே பல கடன்களை வாங்க முடியாது!’ – RBI-யின் புதிய செக்… விவரம் என்ன?

தேவைகள் இருக்கிறது…செலவுகள் இருக்கிறது' என்று ஒருவரே பல தனிநபர் கடன்களை வாங்கும் நிலை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது… Read More

1 hour ago

UPI 123 கட்டணம்: பரிவர்த்தனை வரம்புகளை RBI நீட்டித்துள்ளது- இங்கே முக்கிய மாற்றங்கள்

UPI 123 பே: ரிசர்வ் வங்கி பரிவர்த்தனை வரம்புகளை நீட்டிக்கிறது- இங்கே முக்கிய மாற்றங்கள் உள்ளனUPI 123Pay ஆனது ஃபீச்சர்… Read More

2 days ago

டாடா நானோ EV: ரூ.2.5 லட்சத்தில் கனவு கார்! ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கும் டாடா நிறுவனம்

சாமானியர்களின் கார் கனவை நனவாக்கிய ரத்தன் டாடாவின் சிந்தனையில் உதித்ததே டாடா நானோ. வெறும் ஒரு லட்ச ரூபாயில் கார்… Read More

4 days ago

RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More

5 days ago

பெண்களுக்கு 5000 ரூபாய் | prathan mantri matru vandana yojana 2024 | pmmvy scheme details in tamil

🔴 பெண்களுக்கு 5000 ரூபாய் | prathan mantri matru vandana yojana 2024 | pmmvy scheme details… Read More

6 days ago

இனி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்..மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்”..!! ”

இனி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்..மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்”..!! ” தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”..!! இனி, பெண்களுக்கு… Read More

6 days ago