ஜனவரி 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், உலக நாடுகளில் அதிகரிக்கும் கரோனா தொற்று மற்றும் பிரிட்டனில் உருவாகியுள்ள புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை அவசியம் என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மேலும் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளின்றி பொது முடக்கம் தொடரும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.