மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது “அனைவருக்கும் வங்கி கணக்கு’ வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபே கார்டு பிளாட்டினமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும், கிளாசிக் கார்டாக இருந்தால் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் பிளாட்டினம் கார்ட் இருந்தால் விபத்து ஏற்படுவதற்கு 45 நாட்களுக்கு முன்னர் ஒரு தடவை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அதே போல கிளாசிக் கார்ட் ஆக இருந்தால் விபத்து ஏற்படுவதற்கு 90 நாட்களுக்கு முன் ஒரு தடவை பயன்படுத்தி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே விபத்து காப்பீடு வழங்கப்படும். இது தவிர ரூபே கார்ட் மற்றும் மற்ற ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் ஜன்தன் வங்கி கணக்கில் இல்லாமல் மற்ற கணக்குகள் வைத்திருந்தால் அந்த வங்கியில் சென்று விபத்து காப்பீட்டு திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
இதில் 2 காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (தனி நபர் விபத்து காப்பீடு) ,பிரதான் மந்திரி ஜீவன் பீம யோஜனா (தனிநபர் ஆயுள் காப்பீடு திட்டம்). தனிநபர் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.12 செலுத்தி வந்தால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதேபோல ஆயுள் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.330 செலுத்தி வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையாக பெறலாம்.
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More