தமிழகத்தில் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் மீதமுள்ள கொரோனா நிவாரண தொகை ரூபாய் இரண்டாயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதலில் கையெழுத்து இட்டதே கொரோனா நிவாரண நிதிக்கு தான். தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக ரூபாய் 2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூன் மூன்றாம் தேதி மீதமுள்ள கொரோனா நிவாரண தொகை ரூபாய் இரண்டாயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தடுப்பூசியைப் பொருத்தவரை தமிழகம் கேட்டதை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்காக மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் நகைக்கடை தள்ளுபடி பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு
வங்கிகள் பெயர்கள் அறிவிப்பு
தமிழக அரசின் ரேஷன் கடையில் குடும்ப தலைவியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்படி பெறுவது?
அதில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் துணை ராணுவ படையினர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், எய்ட்ஸ் மற்றும் காசநோய் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்து, வெள்ளம் போன்ற இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்