ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. திருக்கடல் உதயம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார்.
‘பிரேக்கிங் நியூஸ்’ வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான அரங்குகளையும் அமைத்து படப்பிடிப்பு நடத்தி விஷுவல் விருந்தளிக்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஜெய்க்கு ஜோடியாக பானு நடிக்க, தேவ் ஹில், ராகுல் தேவ், ஜெயப்பிரிகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
 
													
																							 
																								
												
												
												 
						 
					 
						 
					 
						 
					 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						 
													 
						