டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விரைவில் விஏஓ காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்.
TNPSC Group 4 VAO Recruitment 2020 Notification:தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி யிடம் பட்டியல் வழங்கியுள்ளதாகவும், மிக விரைவில் தேர்வு நடத்தப்பட்டு அணைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விளாதிருத்ததை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தேவையான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்