தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1083 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 906 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக சென்னை மக்கள் பெருமளவில் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் இரு தெருக்களில் 3 மற்றும் 7 வயது சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் தட்டாங்குளம் பகுதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் வாயிலாக 13 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சின்மயா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட ஏழு பேருக்கும், கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள்சிவப்பு நிற மண்டலங்களாகவும்..
24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும்..
1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிவப்பு நிற மண்டலங்கள்:
- சென்னை
- மதுரை
- நாமக்கல்
- தஞ்சாவூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருப்பூர்
- ராணிப்பேட்டை
- விருதுநகர்
- திருவாரூர்
- வேலூர்
12.காஞ்சிபுரம்
ஆரஞ்சு நிற மண்டலங்கள்:
- தேனி
- தென்காசி
- நாகப்பட்டினம்
- திண்டுக்கல்
- விழுப்புரம்
- கோவை
- கடலூர்
- சேலம்
- கரூர்
10.தூத்துக்குடி - திருச்சிராப்பள்ளி
- திருப்பத்தூர்
- கன்னியாகுமரி
- திருவண்ணாமலை
- ராமநாதபுரம்
- திருநெல்வேலி
- நீலகிரி
- சிவகங்கை
- பெரம்பலூர்
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- ஈரோடு
- புதுக்கோட்டை
- தருமபுரி
பச்சை நிற மண்டலங்கள்:
- கிருஷ்ணகிரி
விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?
- இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
- சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.
- முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
- மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
- பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.
- நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.
- கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.
- தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்- மத்திய அரசு.
- சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்.
- ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்- மத்திய அரசு.
- சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.
- சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு.
- கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.
- மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
- 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்- மத்திய அரசு.
- பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.
- பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி- மத்திய அரசு.
- பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு; சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது- மத்திய அரசு.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
- பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு
- சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது என அறிவிப்பு
- டாஸ்மாக் கிடையாது
- பசுமை மண்டலங்களில், உள்ள மதுபான கடையில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் வராமல் இருப்பதை உறுதி செய்தும், 6 அடி இடைவெளியை கடைபிடித்து இருக்கும் படி திறக்க அனுமதி
- தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே “GREEN ZONE”
- ஊரடங்கு உத்தரவின் போது பொது இடங்களில் மதுபானம், பான், குட்கா, புகையிலை போன்றவற்றை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது
- வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
- விமான,ரயில்,மெட்ரோ போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை
- பச்சை, சிவப்பு, ஆரஞ்சு என அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கும் அதிகமானவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோர் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது.
- தேசிய எல்லையில் அமைத்துள்ள மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அத்தியாவசிய தேவைகளுக்கான சரக்குகளை சுமந்து வரும் வாகனங்களுக்கு பிரத்யேக அனுமதி தேவை இல்லை.