சென்னை: உங்கள் வீட்டு மின் கணக்கீட்டு முறையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வருவதாக குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனாவிற்கு பின் மின் கணக்கீட்டு முறையில் குளறுபடி இருப்பதாகவும், இதனால் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதனை மறுத்துள்ள மின்சார வாரியம் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அறிவித்துள்ளது.
சென்னை உட்பட 6 மாவட்ட மக்களுக்கு சான்ஸ்.. மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
இணையதளத்தில் அறியலாம்
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்து கொள்ள மின் கட்டண விபர இணையதளத்திலோ (tangedco-bill status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் ( tangedco-online payment portal) மூலமாகவோ தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
எப்படி கணக்கீடு
முந்தைய மாத மின் கட்டண தொகையே (pmc) கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட தொகையை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்,
மின்வாரியம் விளக்கம்
விளக்கம்: https://www.tangedco.gov.in/
மின் கட்டண சேவைகள்
(Billing services)
மின் கட்டண விபரம் இணையதள மின் கட்டணம்
(bill status) (online bill payment)
கணக்கு விபரம்
(account summary)
மொத்த தொகை
சந்தேகம் உள்ளதா
மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது. எனவே மின்சார கணக்கீடு தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மின வாரியத்தின் இணைத்திற்கு சென்று சென்ற மாத கணக்கீடு இம்மாதம் கணக்கீடு உள்ளிட்ட விவரங்களை அறியலாம். உங்கள் மின் கட்டணம் எவ்வளவு என்பதையும் அறியலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More