தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் கடைகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழக அரசின் அறிவிப்பின்படி சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் செயல்பட கூடிய கடைகள் விவரங்கள்படி அனைத்து பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் ஸ்பா போன்ற அழகு சாதன நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 34 தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி செயல்படும் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:
மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு
டெல்லி: மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி, சென்னை உட்பட 15 முக்கியமான நகரங்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே படிப்படியாக பயணிகள் ரயில் சேவையை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து திப்ரூகர், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூா், ராஞ்சி, புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. செக்கந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவிக்கு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (11.05.2020) மாலை 4 மணி முதல் IRCTC இணையத்தளத்தில் தொடங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர் எனவும் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில் புறப்படும் இடத்தில் பயணிகள் அனைவரும் கட்டாயம் ஸ்கீரினிங் செய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.