போலீஸ் அதிர்ச்சி:
சம்பந்தப்பட்ட பெண் என்ன சித்தார்த் என்ற பெயரில் ஒரு போலியான ஐடி தயார், சாட் பண்ணி இருக்காங்க. அடடா ஒரு பெண்னே சம்பந்தப்பட்ட இருக்காங்களே என்று போலிஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக போலீஸ் நடவடிக்கை:
இதை தொடர்ந்து தான் தமிழக போலீசு பல எச்சரிக்கையா விடுத்துள்ளனர். பெண்களின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சர்ட்டில் பகிர்ந்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்ஃபர்மேஷன் சட்டம் 2000, பிரிவு 67, 67-ஏ , 67-பி மற்றும் இந்திய தண்டனை சட்டம் ( ஐ.பி.சி)யின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். புகார் தருவர், பாதிக்கப்பட்டவர் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். போலீசுக்கு தகவல் சொல்ல உதவி எண் 112155260 (காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை) என்கின்ற எண்ணில் தகவல் சொல்லலாம்.அதே போல 112 என்ற போலீஸ் எண்ணுக்கும் தகவல் சொல்லலாம்.
வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.