மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் Electrician பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 75 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TANGEDCO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி TANGEDCO கழகத்தில் Electrician பணிக்கென 75 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TANGEDCO கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANGEDCO ஊதிய விவரம் :
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TANGEDCO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TANGEDCO விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.