தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரோஜா உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். அதன்பிறகு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு அரசியல் பக்கம் சென்றுவிட்டார்.
அரசியலில் தனக்கென்று முத்திரை பதித்த அவர், ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைபாடு காரணமாக ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரோஜா விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், தொகுதி மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோஜாவின் உடல் நலம் குறித்து ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜாவின் உடல் நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே செய்ய வேண்டிய இரண்டு அறுவை சிகிச்சைகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ரோஜா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.