Advertisement
Categories: Poltics 2026

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடும் நிலையில் பிடி செல்வக்குமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். திமுகவில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான், விஜயிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிடி செல்வக்குமார். இவர், கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

திமுகவில் இருந்து விலகல்

இந்நிலையில் தான் பிடி செல்வக்குமார் திமுகவில் இருந்து விலகி உள்ளாார். இதுதொடர்பாக பிடி செல்வகுமார் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுகிறது நான் தங்கள் இயக்கத்தில் இணைந்தேன். எனக்கு மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு தந்தீர்கள். அதற்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம் கட்டி தந்துள்ளேன்.

திராவிட முன்னேற்ற கழகம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில், குமரி மக்களுக்கு மேலும் அதிரடியாக நல்ல செயல் திட்டங்களை செய்ய எண்ணியிருந்தேன். காலம் எனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுகிறது.

எனவே குமரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் திமுகவில் இருந்து விலகி மீண்டும் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக எனது பணியை தொடர விரும்புகிறேன். காலம் மாறும் மாற்றமே மானுட தத்துவம் என்ற அடிப்படையில் என்றும் மக்களுக்காக நற்பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

என்ன காரணம்?

இதற்கிடையே தான், அவரது விலகிலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிடி செல்வக்குமார் கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது திமுகவில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

admin

Recent Posts

ஓடிடியில் யூத் எப்போது? OTT release of the film Youth

யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக... நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல்… Read More

2 hours ago

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 months ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 months ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

2 months ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago