தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு பொதுத் துறை ஊழியர்களான அரசுப் போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தோட்டக்கழக ஊழியர்கள் 2,91,975 பேருக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
இவர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ. 210.48 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.