நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன்.கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.