Advertisement

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கா விட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந் தேதிக்குள்  பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: பான்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களுடைய பான்கார்டு செயல்படாமல் முடங்கி விடும்.

ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.  ஏப்ரல் 1-ந் தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான்கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம். ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான் கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.  இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். என்றாலும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆதார் திட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று அறிவித்ததோடு, வருமான வரி தாக்கல் செய்வதற்கும், பான் ஒதுக்கீடு செய்வதற்கும் இது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Important Link

Link Here

admin

Recent Posts

நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகிறது! பட்ஜெட் விலையில் Tata Tiago EV Facelift!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More

4 hours ago

SSC CGL 2026 Notification Officially Released! 12200+ Vacancies Announced for Various Group B & Group C Posts Across Central Government

The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More

1 day ago

தொழிலாளர் நல வாரியத்தில் அரசு சலுகைகள் என்ன கிடைக்கும் ?

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More

6 days ago

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More

7 days ago

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

1 week ago

How To Apply For A New Ration Card In Tamil Nadu Eligibility Process

A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More

1 week ago