Advertisement

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – கடன் இணைத்த மானியத் திட்டம்

Video Link : https://youtu.be/m6Ltr9g4130

Video Link: https://youtu.be/FslxptAdIbY

மக்கள் தங்களுடைய கனவு இல்லத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, மாண்புமிகு பிரதமர் ஒரு முழுமையான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு நோக்கத்தை அறிவித்துள்ளார், 17 ஜூன் 2015ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயர், ‘பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – எல்லாருக்கும் வீடு.’

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் முக்கியமான உட்பிரிவுகளில் ஒன்று, குறைந்த வருவாய்க் குழு/பொருளாதாரரீதியில் பலவீனமான பிரிவு (EWS/LIG) மற்றும் நடுத்தர வருவாய்க் குழு (MIG – I & II) ஆகியவற்றுக்கான கடன் இணைத்த மானியத் திட்டம் (CLSS) இந்தத் திட்டத்தின்கீழ், கடன் வழங்கும் அமைப்புகளின்வழியாக மத்திய அரசு தகுதியுள்ள பலன்பெறுவோருக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி உதவி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சட்ட உரிமை பெற்ற அனைத்து நகரங்கள், அவற்றின் அருகிலுள்ள திட்டப் பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலை அரசாங்கம் அவ்வப்போது மேம்படுத்திவரும்.

வட்டி மானியமானது இரண்டு மத்திய ஒருங்கிணைப்பு ஏஜென்ஸிக்களின் வழியே வழங்கப்படுகிறது – தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) மற்றும் வீட்டுவசதி & நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (HUDCO). முதன்மை அரசு அமைப்புகள், கடன்வழங்கும் அமைப்புகளுக்கு மானியத்தை வழங்குகின்றன, அவை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மானியம் பெற உதவுகின்றன.

IIFL வீட்டுக்கடன்கள் ஓர் அங்கீகாரம் பெற்ற கடன் வழங்குநர் ஆகும்; CLSS மானியத்துக்கான தகுதி அடிப்படையைப் பூர்த்திசெய்யும் கடன் விண்ணப்பங்கள் தேசிய வீட்டுவசதி வங்கியின் (NHB) அங்கீகாரத்துக்காக அனுப்பப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக ரூ 2.67 லட்சம்வரை* வட்டி மானியம் பெறலாம். மத்திய அரசு வழங்கும் வட்டி மானியமானது தகுதியுள்ள பலன்பெறுவோரின் கடன் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. இதன் பொருள், பலன் பெறுவோர் ரூ. 20 லட்ச ரூபாயை 8.70% வட்டியில் 20 வருடக் கடனாகப் பெறும்போது, அந்தக் கடன் தொகையில் ரூ 2.67 லட்சம்* மானியமாகப் பெறுவார். இதனால், அவர் பெறும் வீட்டுக்கடனின் வட்டி விகிதம் 6.79%ஆகக் குறைகிறது.

நாடுமுழுவதும் பலன்பெறுவோர் இந்த மானியத்தைப் பெறுவதற்கு IIFL வீட்டுக்கடன்கள் உதவிவருகிறது.

கடன் இணைத்த மானியத் திட்டம் (CLSS):

ஒரு வீட்டின் ஆண்டு வருவாய் ரூ 6 லட்சத்துக்குள் இருந்தால், அந்த EWS மற்றும் LIG வீடுகள்/குடும்பங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மானியத்துக்குத் தகுதிபெறும்; அந்தக் ‘குடும்பத்துக்கு’ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒரு ‘பக்கா’ வீடு இருக்கக்கூடாது. மானியமானது பலன்பெறுபவருடைய கடன் கணக்கில் முன்கூட்டியே வரவுவைக்கப்படுவதால், வீட்டுக்கடன், EMI ஆகியவை குறைகின்றன.

CLSS திட்டத்தின் அம்சங்கள்

  • அதிகபட்ச மானியம் ரூ. 2.67 லட்சம்*
  • 20 வருடங்கள் அல்லது கடன் காலகட்டம், இந்த இரண்டில் எது குறைவோ அதற்கு 6.5%* விகிதத்தில் வட்டி மானியம்
  • ரூ 6 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்குமட்டுமே மானியம் கிடைக்கும்; ரூ 6 லட்சத்துக்குமேல் கூடுதல் கடன் தேவைப்பட்டால், மானியம் இல்லாத விகிதத்தில் அதனைப் பெறவேண்டியிருக்கும்
  • இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கக் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்கவேண்டும்.

Apply Link: http://pmaymis.gov.in/

This Video About : The Mission will be implemented during 2015-2022 and will provide central assistance to Urban Local Bodies (ULBs) and other implementing agencies through States/UTs for:
1. In-situ Rehabilitation of existing slum dwellers using land as a resource through private participation
2. Credit Linked Subsidy
3. Affordable Housing in Partnership
4. Subsidy for Beneficiary-led individual house construction/enhancement.

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

6 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago