பிரபல இளம் காமெடி நடிகர் ஒருவர், தான் வயதான தோற்றத்தில், உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். அவர் ஏதாவது ஆப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டாரா? என்று கூட பலர் இவரிடம் ஷாக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
வயசான தோற்றத்தில் இருக்கும் இந்த பிரபலம் வெறும் யாரும் அல்ல, தமிழில் பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் நடிகர் பால சரவணன்.
இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக சலூன் கடைகள் திறக்காததால் என்னவோ இந்த கெட்டப்புக்கு மாறியுள்ளார் பால சரவணன். இந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்தல் அழகு என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் உண்மையாகவே உங்களுக்கு வயசு ஆகிடுச்சா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விரைவில் இந்த கேள்விக்கு அவரே பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.