Actors Suriya and Karthi announcement: சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பலரது வாழ்க்கையும் ஜாமாக்கி உள்ளது. வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னை மழையில் மிதந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் பலரும் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி தத்தளித்து வருகின்றனர்.
நேற்று இரவு மழையின் தாக்கம் குறைந்த போதும் ஆங்காங்கே தண்ணீர் வடியாமல் இருப்பதாக செய்தி. மக்கள் பலரும் வீடுகளுக்குள் புகுந்த நீரால் சாப்பாடு தண்ணீர் பால் என அத்தியாவசிய தேவைக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
நடிகைகளின் ஹேண்ட் பேக்கில் இருக்கும் 20 வித்தியாசமான பொருட்கள்
சென்னையை புரட்டி போட்ட இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்திற்கு மனிதம் ஒன்றே தீர்வாகும் என களத்தில் இறங்கி உள்ளனர் நல்ல உள்ளங்கள் பலரும்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக நிவாரண தொகையாக 10 லட்சம் கொடுத்து பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். வெள்ளம் நல்ல பாதித்த பகுதிகளில் தங்களது ரசிகர் மன்றம் வாயிலாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு இத்தொகையினை வழங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பணிகள் போய் சேருமாறு ரசிகர் மன்றங்களை முடுக்கி உள்ளனர். ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது என பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நல உதவிகளை செய்து வருகின்றனர்.
சூர்யா மற்றும் கார்த்தியின் இச்செயலால் திரை பிரபலங்கள் பலரும் வெள்ள நிவாரண பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More