இன்றளவும் ஆண்களின் சாம்ராஜ்யமாக கருதப்படும் தொழில் முனைவில் ஒரு சில பெண்களால் மட்டுமே பெரிய நிறுவனங்களை நடத்த முடிகிறது . ஏனைய பெண்கள் சிறு தொழில்களை மட்டுமே தொடங்கி நடத்த முடிகிற நிலை உள்ளது.
பாரதிதாசன் பல்கலைகழக (Bharathidasan University) பொருளியல் மற்றும் மகளிரியல் துறை சார்பாக பெண் தொழில் முனைவோர்களின் முன்னேற்றம் குறித்து நடத்திய ஆய்வுகளின் வழியாக இவர்கள் கட்டமைப்பு ரீதியாக , உளவியல் ,சமூக, பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அந்த சிரமங்களை நிறுவன ரீதியாக எதிர்கொள்ளும் விதமாக மகளிர் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT- WOMEN ENTREPRENEURS ASSOCIATION OF TAMILNADU ). இது 2006 ஆம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . இது திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
பாரதிதாசன் பல்கலைகழக பொருளியல் மற்றும் மகளிரில் துறை இச்சங்கம் உருப்பெறுவதற்கு ஒரு முக்கிய கருவியாக மட்டுமல்லாது தொடர்ச்சியாக தனது ஆதரவினை அளித்து வருகிறது.
தொழில் முனைவின் வழியாக பெண்களை சக்தியாக்கம் பெற செய்வது என்ற பரந்த நோக்கில் மகளிர் தொழிமுனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் WEAT (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) செய்வது வருகிறது.
சமுதாயத்தின் அடிமட்டத்தில் பல்வேறு திறமைகளையும், ஆளுமை பண்புகளையும் உள்ளடக்கிய பல பெண்கள் முன்னேற , அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டி எவ்வித பாகுபாடின்றி அனைவரது முன்னேற்றத்திற்கும் பெரிதும் பாடுபட்டு அவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் தகுந்த ஆலோசனைகளையும் , ஆதரவையும் பெண் தொழில் முனைவோர்களுக்கு அளித்து வருகிறது.
தொழில்முனைவில் ஒருங்கிணைந்த உத்தியை கையாண்டு பரந்த தொழில்முனைவு தளத்தை உருவாக்குதே WEAT-ன் (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) முதன்மை நோக்கமாகும்.
சுய தொழில் புரிய விருப்பமுள்ள பெண்களுக்கு சிறு , குறு தொழில்கள் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
பெண்களை பொருளாதார நிலையில் மேம்படச் செய்வது .
MSME-DI (Micro Small and Medium Enterprises – Development Institute) ,
DIC (District Industries Center),
TIIC (Tamilnadu Industrial Investment Corporation),
National Institute Of Technology,
BHEL (Bharath Heavy Electricals Limited),
SIDCO (Small Industries Development Corporation) ,
NSIC (National Small Industries Corporation) ,
NABARD (National Agriculture and Rural Development ),
TIDTSSIA (Tiruchirappalli District Small Industries And Tiny Industries Association),
COIR BOARD,
Khadi And Village Industries Commission,
வங்கிகள் (Indian Overseas Bank,Canara Bank, Bank Of India, India & etc),
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT) பல மாவட்டங்களில் தனது கிளை அலுவலகங்களை துவங்கி செயல்பட்டு வருகிறது.
மற்றும் பல கிளைகளை துவங்கி வருகிறது.
WEAT- ன் தலைமை அலுவலகம் :-
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT),
No:1,B Block , St,Paul Complex,
பாரதியார் ரோடு,
திருச்சி- 620 001.
தொலைப்பேசி : 0431-4200040, 94887 88206,
மின்னஞ்சல் : weat.assn@Gmail.Com.
தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணமுடைய பெண்கள் WEAT (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) -ல் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT)
Scheme to Provide Nutritional Feed to Milch Cows with 50% Subsidy: Tuticorin Collector's Announcement கறவை… Read More
The Government of India introduced the PAN 2.0, the upgrade version of the PAN card with QR… Read More
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன்… Read More
TNPSC Group 4 Result update Read More
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More