பொது முடக்கம் வரும் 17ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் 20ஆம் தேதி முதல் சாலை ரயில் விமான போக்குவரத்தை அரசு படிப்படியாக தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதை அடுத்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் ஷாப்பிங் மால்கள் திரையரங்குகள் திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
இவற்றுக்கு கட்டுப் பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்குவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடன் பிரதமர் மோடி கடந்த சில நாட்களில் 6 முறை பேசியுள்ளார் இதில் தொழில்துறையை மீட்டெடுக்க பல வகைகளில் அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பொது முடக்கத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மே 20 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.