ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் அதனை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா எதிரான போருக்கு RBI முழுமையாக தயாராக இருப்பதாகவும் பரவாமல் தடுப்பது எப்போது தற்போது முக்கியமான தெரிவித்திருக்கிறார்.
2020 21 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது ஆக தெரிவித்திருக்கிறார்.
கார் உற்பத்தி குறைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் உலகில் GTP வளர்ச்சியை உயர்வு அடைந்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிப்படைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமை போதுமான இருப்பு இருப்பதால் கட்டுப்பாடு ஏதும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
கச்சா எண்ணெய் விலை நிலையற்ற தன்மையை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் என கணித்துள்ளனர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் 98 சதவீத ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் பயன்பாடு மற்றும் ஆன்லைனில் பணம் பரிமாற்ற சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் மின்சார தேவையை நாடு முழுவதும் 25 சதவீதம் வரை குறைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
பங்குசந்தைகள் தங்குதடையின்றி செயல்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்குவதற்கு ஏதுவாக வங்கிகளில் பணம் இருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அவர்களிடமிருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதலாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.
வங்கிகள் தாராளமாக கடன் வழங்குவதற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.