தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் பெரம்பூரில் தங்கியிருக்கிறார். இவரது மகளின் பெயர் பிரதீபா (வயது 22). பிரதீபா கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதி வருடம் பயின்று வரும் நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகளுடன் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரதீபா கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், பெரம்பூரில் இருக்கும் வீட்டிற்கு செல்லாமல் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருக்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில், காலையில் சக மாணவிகள் இவரது அறையை தட்டியும் கதவை திறக்க நிலையில், இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், பிரதீபா மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீபாவிற்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், பிரதீபாவின் மரணத்திற்கு இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பு காரணம் என்பது தெரியவந்துள்ளது. மாணவியின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்று, தடவியல் துறை ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், மாணவி இயற்கையாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மாணவி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவியின் மர்மமான உயிரிழப்பு..! பிரேத பரிசோதனை அதிர்ச்சி முடிவு
By
Posted on