எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மார்ச் மாத இறுதிக்குள் நீங்கள் வங்கி சேவைகளை தடையின்றி தொடர, ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைத்து இருக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் துறையில் வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
notification Link Click Here
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நாடு முழுவதும் உள்ள தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2022 க்கு முன் தங்கள் பான் கார்டுடன் தங்கள் ஆதார் அட்டையை இணைக்குமாறு அறிவுருத்தி இருந்தது அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். ஒருவேளை இன்னும் அதை செய்து முடிக்காதவர்கள் உடனே அதை செய்து விடுங்கள். காரணம், இந்த மாதம் மட்டுமே உங்களுக்கு டைம். மார்ச் 31 2022க்கு பிறகு, பான் எண் இணைக்கப்பட்டால், அவை செலுப்படியாகாது என்ற தகவலும் ஏற்கெனவே வெளியாகி இருந்தது.
இதற்கு முன்பு ஆதார்- பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 2021-வுடன் முடிவடைய இருந்த நிலையில், மார்ச் 31 2022 வரை நீட்டிக்கப்பட்டது.குறிப்பிட்ட தேதிக்கு பின்பும் பான் – ஆதார் இணைப்பை நிகழ்த்தவில்லை என்றால் அந்தந்த வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது.
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139ஏஏ-வின் படி, மார்ச் 31, 2022 க்குள் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை (PAN) ஆதார் எண் உடன் இணைப்பது கட்டாயமாகும் இந்த தகவலை வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வண்ணம் வங்கி நிர்வாகம், குறுஞ்செய்தி மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு ரிமைண்டர் செய்து வருகிறது. இதை செய்யவில்லை என்றால் ஏப்ரல் 1, 2022 முதல் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் எஸ்பிஐ கார்டு செயல்படாது. எனவே, தடையில்லா சேவைகளைப் பெற, பயனர்கள் தங்களது பான் எண்ணை ஆதார் கார்டு உடன் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே இணைத்திடுங்கள்.