பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வழங்க தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக மாநகராட்சியிடம் வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவுசெய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில், இதுவரை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, கைபேசி எண், மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை வழங்கிய, 14,633 சாலையோர வியாபாரிகளுக்கு, நிவாரண தொகையாக முதல் கட்டமாக 1000 மற்றும் இரண்டாம் கட்டமாக 1000, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய்1000 வழங்கப்பட உள்ளது.
இதில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை பெற பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுக்கு வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை (நகல்) எண், கைபேசி எண், வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண் (IFSC)குறியீட்டு எண், போன்ற விவரங்கள் கொண்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டலத்தில் வழங்கும் பட்சத்தில், நிவாரணத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் மாற்ற இயலும், எனவே இந்த வாய்ப்பை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையாளர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More