Advertisement

மே மாத இறுதியில் நாட்டில் 5.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். 38 ஆயிரம் பேர் இறப்பார்கள்’

மே இறுதியில் 5.35 லட்சம் பேர் பாதிப்பு; 38 ஆயிரம் பேர் சாவு: பீதி கிளப்பிய கணிப்பை பொய்யாக்கிய ஊரடங்கு


நிபுணர்களையே குழப்பிவிட்ட கொரோனா.

புதுடெல்லி:
‘மே மாத இறுதியில் நாட்டில் 5.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். 38 ஆயிரம் பேர் இறப்பார்கள்’ என நாட்டின் நான்கு முக்கிய அமைப்புகள் கடந்த மாதம் கூறிய கணிப்பு பொய்யாகி இருக்கிறது. 

அதில், ‘கொரோனாவால் இப்போது (ஏப்ரல்) பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு செய்ததில் மே மாதம் இறுதியில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.35 லட்சமாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கை 38,220 ஆக உயரக்கூடும். மே 5ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 3,258 பேரும், மே 12ம் தேதி வரையிலான 2வது வாரத்தில் 10,924 பேரும், மே 19ம் தேதி வரையிலான 3 வாரத்தில் 38,220 பேரும் இறப்பார்கள். எனவே, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் 76 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கு தற்காப்பு உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போதுமான எண்ணிக்கையில் இருப்பு வைத்துக்கொள்வது அவசியம்,’ என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

நேற்று வரையில் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை கூட தாண்டவில்லை. பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்குள் உள்ளது. சில நேரங்களில், மெத்த படித்தவர்களின் கணிப்புகள் பொய்யாகும் என்பதற்கு இந்த ஆய்வறிக்கை ஒரு உதாரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 week ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 weeks ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

3 weeks ago