பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
விலங்குகள் மீது அதிகமான பாசமும், நேசமும் விராட் கோலி வைத்துள்ளார். சமீபத்தில் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் கொண்ட குழு துன்புறுத்தியதைப் பார்த்த விராட் கோலி உடனடியாக பீட்டா அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுதொடர்பாக கடிதமும் எழுதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கக் கோரினார். இதையடுத்து மால்டி நகர போலீசார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பெங்களூருவில் சாலையில் அனாதையாகக் காயத்துடன் இருக்கும் நாய்களுக்கு வசிப்பிடம் அமைக்கக் கோலி உதவினார். மேலும், தனது ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து, நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார்.
விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பீட்டா அமைப்பின் சார்பில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிக்கர் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமமாலினி, ஆர்.மாதவன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More