Advertisement
Categories: Service

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிட நலத்துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஆகஸ்டு 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த பெண்கள், பெண்கள் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 5 லட்சம் ரூபாபய் வரை அரசு கடனுதவி வழங்குவதுடன், வட்டி மானியமும் பயனாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிட நலத்துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஆகஸ்டு 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த பெண்கள், பெண்கள் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 5 லட்சம் ரூபாபய் வரை அரசு கடனுதவி வழங்குவதுடன், வட்டி மானியமும் பயனாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

எனவே, ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் நன்னிலம் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்களை நில உடமைதாரர்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசின் நன்னிலம் திட்டம் – தகுதிகள்

  • ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த பெண்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும்.
  • வயது 18- 55 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்
  • குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும். விவசாயக் கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம்
  • விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது
  • வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரே தெரிவு செய்ய வேண்டும்
  • நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனைத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்
  • நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம், நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது
  • நிலத்தினை 20 வருடங்களுக்கு விற்பனை செய்யதவாறு வில்லங்கம் ஏற்படுத்த வேண்டும்

நிலத்துக்கு அரசு கொடுக்கும் சலுகைகள்

நிலவளத்தை மேம்படுத்தல் ஆழ்குழாய் கிணறு / திறந்த வெளி கிணறு, பம்ப் செட் அமைத்தல், குழாய் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல்முறை நீர்ப்பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்காக மானியம் வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எவ்வளவு தொகை கிடைக்கும்?

திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது 5 லட்சம் ரூபாய் அதிகபட்சமாக மானியமாக வழங்கப்படும்.

மின் இணைப்பு திட்டம்

முன்னுரிமை அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர் ஒருவருக்கு ரூ, 75,000/- வைப்புத் தொகையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ழகத்திடம் நேரடியாக தாட்கோ செலுத்தி ஆதிதிராவிட விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத் தந்திட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலம் பதிவு தொடர்பான முக்கிய தகவல்

நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். வாங்கப்படும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

எங்கு விண்ணப்பிப்பது?

இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களாக இருப்பவர்கள் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குறிப்பாக உங்கள் பகுதியில் இருக்கும் தாட்கோ அலுவலகத்துக்கு சென்று கூடுதல் தகவல்களை பெற்று விண்ணப்பிக்கவும். பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், புதிய பயனாளிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். https://tahdco.com/ என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

admin

Recent Posts

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

1 week ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

3 weeks ago

TAMCO LOAN Low interest rate 6% Tamilnadu Government Schemes

பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More

1 month ago