போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 200-இன்ச் புரோஜெக்சன் கொண்ட புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது போர்ட்ரானிக்ஸ். குறிப்பாக இந்த புதிய புரொஜெக்டர் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
போர்ட்ரானிக்ஸ் தற்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் ஆனது 4கே ஆதரவைக் கொண்டுள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 430 Smart Projector Specification): 4K டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் 1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூனை ஆதரிக்கிறது. குறிப்பாக இதில் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் ஆட்டோஃபோகஸ் (Auto Focus) சப்போர்ட் வருகிறது.
அதேபோல் இந்த புரொஜெக்டரில் 45 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. ஆகவே, மினி தியோட்டர் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் 10000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர்.
பில்ட்-இன் 14 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர். அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர். பின்பு ஆடியோவிற்கான புளூடூத் கனெக்டிவிட்டி ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 430 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நிறுவனம்.
ஸ்கிரீன் மிரரிங் (Screen mirror) அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர். பின்பு இதை ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஃபை(Wi-Fi), ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். பொழுதுபோக்குத் தேவைகளுக்காக நெட்ஃபிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன.
போர்ட்ரானிக்ஸ் தற்போது அறிமுகம் செய்துள்ளது இந்த புரொஜெக்டரின் எடை 2 கிலோ ஆகும். மேலும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டருக்கு ஒரு வருட வாரண்ட்டி வருகிறது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். அதேபோல் இந்த சாதனம் கருப்பு நிறத்தில் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலின் அசல் ரூ.34,449-ஆக உள்ளது. ஆனால் இந்த சாதனத்திற்கு அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே அமேசான் தளத்தில் சில நாட்களுக்கு மட்டும் ரூ.29,999 விலையில் வாங்க முடியும். இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.