கிசான் கிரெடிட் கார்டு திட்டம் (KCC) விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். இதன் KCC திட்டத்தின் மூலம் வங்கிகளில் இருந்து கடன் பெறலாம். இதை விவசாயிகள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.
KCC திட்டத்தில் விவசாயிகள் மிகவும் எளிமையான செயல்முறை மூலம் கடன் பெறலாம். இந்த பதிவில் லோன் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்ப்போம்.
கிசான் கிரெடிட் கார்டு கடன்களுக்கான கட்டணங்கள் மற்றும் செயல்முறைகள்: கிசான் கிரெடிட் கார்டு திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு பதில் அளித்துள்ளது. கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் உள்ள கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து பார்ப்போம்.
கட்டணங்கள்: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் ரூ. 3 லட்சம் வரையிலான கடனுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. அரசு அறிக்கையின்படி ரூ. 3 லட்சம் வரையிலான கிசான் கிரெடிட் கார்டு கடன்களுக்காக செயலாக்கம், ஆவணங்கள், ஆய்வு கட்டணங்கள் மற்றும் பிற சேவை கட்டணங்களை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமான கடன்களுக்கு செயலாக்க கட்டணம், ஆய்வுச் செலவுகள் போன்ற கட்டணங்கள் அந்தந்த வங்கிகளால் போர்டு கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
கிசான் கிரெடிட் கார்டு வட்டி விகிதம்: கிசான் கிரெடிட் கார்டு கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி கேசிசி திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் 3 சதவீத வட்டி மானியத்தைப் பெறலாம். இதன் மூலம் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 4 சதவீதமாக குறைக்க முடியும். ரூ. 3 லட்சத்துக்கும் மேலான கடனுக்கான வட்டி விகிதங்கள் அந்தந்த வங்கியின் வாரியத்தால் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: கிசான் கிரெடிட் கார்ட திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வங்கியின் இணையதளத்தை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: வங்கியின் இணையதளத்தில் உள்ள ஆப்ஷன்களின் பட்டியலில் இருந்து கிசான் கிரெடிட் கார்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: “அப்ளை” என்ற பட்டனை கிளிக் செய்து விண்ணப்ப செயல் முறையை தொடங்கவும். தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பி “சப்மிட்” என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். நீங்கள் கடன் பெற தகுதியுடையவராக இருந்தால் அடுத்த 3 முதல் 4 வேலை நாட்களுக்குள் வங்கி உங்களை தொடர்பு கொள்ளும்.