Chennai District Collector Office Recruitment 2020: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு (UYEGP) உருவாக்கும் திட்டம்
வேலையற்ற இளைஞர்களுக்கானவேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP 2010-2011 ஆம் நிதியாண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினால் கடந்த 10 ஆண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்திற்கு 2020-21 ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற 285 பயனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிக பட்ச ரூ.10 இலட்சமும் சேவை தொழில்களுக்கு ரூ.5 இலட்சமும் வியாபாரத்திற்கு ரூ.5 இலட்சமும் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவர்களின் கல்வி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000/- க்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் திருநங்கைகர்கள் சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின வகுப்பினர்) 45 வயத்துக்குள்ளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.1,25,000/-ம் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான உற்பத்தி சேவை மற்றும் விற்பனை தொழில்கள் செய்ய விண்ணப்பிக்க சென்னை மாவட்டத்தில் வசிக்கும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் சென்னை மாவட்டம் கிண்டி தொழிற் பேட்டையில் அமைந்துள்ள மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 004-22501621/22, 9788877322 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.