தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாகத் தற்காலிக முறையில் பணியாற்றி வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவ்வாறான பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டின் மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவின் போது 19,427 தற்காலிக ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களாக பணியாற்றி வந்த 19,427 பேரில், முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
Order Copy: Click Here