கிராம உதவியாளர் ஹால் டிக்கெட் டவுன்லோட்
https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174
அரசாணை (நிலை) எண்:360 வருவாய் நிதி 4(2) துறை
நாள்:6.7.2000ல் வழங்கப்பட்ட ஆணைகளின்படி
(1) நீக்கப்பட வேண்டிய கிராம கணக்ககளின் விபரம்
கிராம கண்ணக்கு எண். | தலைப்பு | நீக்கப்பட வேண்டியதின் காரணம் |
(1) | (2) | (3) |
1. | சாகுபடி(Cultivation) பற்றிய மாதாந்திர பதிவேடு (Monthly Register) | அடங்கல் பதிவேட்டினை கணினி மயமாக்கப்பட்ட உடன் இக்கணக்குகளை நீக்கலாம் |
1.ஏ | சாகுபடி செய்யப்பட்ட வௌ;வேறு பயிர்களின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டி. | அடங்கல் பதிவேட்டினை கணினி மயமாக்கப்பட்ட உடன் இக்கணக்குகளை நீக்கலாம் |
2டி. | கிராமத்தில் சில பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாய்ச்சப்பட்ட பரப்பில் விவரங்களை காட்டும் விவரப்பட்டி | இக்கணக்குகளின் விவரங்கள் கணக்கு எண் 2இலும் மற்றும் “அ”பதிவேட்டிலும் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம். |
2எப். | கிராமத்தில் பல்வேறு வகை நில வகுப்புகளின் பரப்புகளைக் காண்பிக்கும் விவரப்பட்டி | இக்கணக்குகளின் விவரங்கள் கணக்கு எண் 2இலும் மற்றும் “அ”பதிவேட்டிலும் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம். |
4. | அனைத்து வகை அரசிறைக்கழிவுகளைக் (டீநசணை னுநனரஉவழைn) காட்டும் விவரப்படி. | அத்தகைய அரசிறைக் கழிவுகள் (டீநசணை னுநனரஉயவழைn) தற்சமயம் கிராமங்களில் செய்யப்படுவதில்லை. எனவே நீக்கலாம். |
8ஏ. | I மற்றும் II – ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் நீர்ப்பாய்ச்சப்பட்ட நிலங்களைக் காண்பிக்கும் விவரப்படி. | இக்கணக்குகளை நிர்வகிப்பதினால் பெறப்படும் விவரங்கள் “அ” பதிவேட்டிலும் காணப்படுவதினால் இதனை நீக்கலாம். |
8பி. | III-ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாசனம் பெற்ற நிலங்களின் விவரப்பட்டி. | இக்கணக்குகளை நிர்வகிப்பதினால் பெறப்படும் விவரங்கள் “அ” பதிவேட்டிலும் காணப் படுவதினால் இதனை நீக்கலாம். |
10சி மற்றும் 10டி. | வருவாய் பதிவுகளை மாற்றுவதற்காக (Transfer of Registry) கிராம நிர்வாக அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டு வரும் துணைப் பதிவேடு (Subsidiary Register) | கிராம கணக்கு எண் 3-இல் இதன் விவரங்கள் பெறப்படுவதினால் இவைகள் நீக்கப்படுகின்றன. |
23. | பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையைக் காட்டும் விவரப்பட்டி. | இக்கணக்கு, கணக்கு எண்10(1) கணக்குடன் சேர்த்து பேணப்பட ஆணையிடப்படுவதால் நீக்கப்படுகிறது. |
இணைப்பு – II
(1) தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டிய கிராம கணக்குகளின் விபரம்.
கணக்கு எண். | தலைப்பு |
2 | கைப்பற்று நிலத்தையும், சாகுபடி நிலத்தையும் புலவாரியாக காட்டுகின்ற வருடாந்திர அறிக்கை. |
2சி. | அரசு, குடிகள் ஆகியோருடைய தோட்டம் மற்றும் தோப்புகளைக் குறித்த விவரப்பட்டி. |
5(iii) | வருவாய் நிலை எண் 14-இன் கீழ் அளிக்கப்படும் வழக்கத்திற்கு மாறான தள்ளுபடி பற்றிய விவரப்பட்டி. |
7. | பல்வகை வருவாயினைக் (ஆளைஉநடடயநெழரள சுநஎநரெந) காண்பிக்கும் விவரப்பட்டி |
10(i) | பட்டாவாரியாக ஒவ்வொரு நபருடைய நிலவரித்திட்ட விவரத்தினைக் காண்பிக்கும் சிட்டா. இக்கணக்கு முன்பு பேணப்பட்டு வந்த கணக்கு எண்-10(ஏ) உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். மேலும் தற்சமயம் கணக்கு எண்23-இல் பேணப்பட்டு வருகின்ற விவரங்களையும் சிட்டாவின் கடைசிப் பக்கத்தில் காட்டக் கூடியதாக பேணவேண்டும். இக்கணக்கை கணினி மயமாக்கும்பொழுது கண்டிப்பாக கணினியில் கொண்டு வரவேண்டும். |
10(ii) | ஓவ்வொரு கிராமத்திலும் நிலவரித்திட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலங்களின் விவரம். |
11. | (Particulars of Settlement in each village) |
12. | பட்டா படிவம் (இப்படிவம் கிராமக் கணக்கு எண் 11ஏஆன பல்வகை வருவாய்க்கான பட்டா வடிவ விவரங்களை உள்ளடக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். |
13. | மொத்த கிராமத்திற்கான நிலவரித்திட்ட சுருக்க விவரப்பட்டி. |
14(பி) | தினசரி வசூல் சிட்டா |
15. | வசூலிக்க இயலாத பாக்கிகளுக்கான விவரப்பட்டி. |
18. | செலுத்துப்பட்டியல் |
19. | பற்றுச்சீட்டு படிவம் |
20. | பிறப்புகளையும், இறப்புகளையும் மற்றும் கால்நடை வியாதிகளையும், கால்நடை இறப்புகளையும் மற்றும் அம்மை குத்திப் பாதுகாப்புப் பெற்றிராத குழந்தைகளை பற்றிய பதிவேடு. |
21. | மழை மற்றும் நீர் வழங்கு விவரப்பட்டி |
24. | கால்நடைகளையும் மற்றும் விவசாயக் கருவிகளையும் பற்றிய விவரப்பட்டி இக்கணக்கை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புள்ளிவிவரம் எடுக்காமல், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிடப்பட்ட நாளில் புள்ளிவிவரம் எடுத்து புதுப்பிக்கப்பட வேண்டும். கிராமத்தில் கிடைக்கத் தக்க கனிமங்களைப் பற்றிய விவரப்பட்டி. |