இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் ஜடேஜா, பும்ரா, அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோர் காயமடைந்ததால் தற்போது நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால் நான்காவது டெஸ்ட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வந்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் குவித்தது.
![](https://infotelegraph.com/wp-content/uploads/2021/01/n246756498cf51ace4d5ae7733ec66e32449cc88065d6ec4de5ee7064c63fdcc7fe0a91e82-1024x626.jpg)
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)