இதையடுத்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45 ரன்கள் குவித்துள்ளனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிஸ்சில் 2 விக்கெட்களை இழந்து 62 ரன்கள் குவித்துள்ளார்கள்.
இதில் ரோகித் சர்மா 44 மற்றும் சுப்மன் கில் 7 ரன்கள் குவித்துள்ளார்கள். ஆனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளிக்கு பின்பு கனமழை காரணமாக இரண்டாவது நாள் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்றாவது நாள் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழக்க தொடங்கினர். இதில் புஜாரா 25 , பண்ட் 23 , மயங்க் அகர்வால் 38 மற்றும் ரஹானே 37 ரன்கள் மட்டும் எடுத்துள்ளனர்.
இதன்பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் நிதானமாக விளையாடி பாட்னர்சிப்பில் 123 ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடி வந்த இவர்களது ஜோடியை பாட் கம்மின்ஸ் பிரித்தார். பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷர்துல் தாகூர் 67 ரன்களுடன் போல்ட்டில் விக்கெட் இழந்தார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்து விளையாட யாரும் இல்லததால் சுந்தரும் 62 ரன்களுடன் வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 111.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் பேட் செய்து 21 ரன்கள் குவித்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 294 ரன்கள் குவித்துள்ளனர். இதில் வார்னர் 48 ரன்கள் மற்றும் ஸ்மித் 55 ரன்கள் குவித்துள்ளனர். இந்திய பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் 5 விக்கெட்களையும் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களையும் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிஸ்சில் சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் புஜாரா (56), ரிஷப் பண்ட் (89) மற்றும் சுப்மன் கில் (91) நிதானமாக விளையாடி அரைசதம் விளாசினர். இதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைபற்றி அசத்தியது. இந்திய அணியின் இந்த வெற்றி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது.