70% மானிய விலையில் “சோலார் பேனல்” அமைக்க விண்ணப்பிக்கலாம்
விவசாயிகள் மானிய விலையில் அரசு வழங்கும் சோலார் பம்பு செட் அமைக்க விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மின்சார தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் விவசாயக் கிணறுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பது மிகவும் தாமதமாகிறது. இந்த நிலையில், சுற்றுப்புறச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மரபு சாரா எரி சக்தியில், அதாவது சூரிய ஒளியில் இயங்கக் கூடிய பம்ப் செட்டை அரசு மானியத்துடன் அமைத்துத் தரும் திட்டமானது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் மின்சாரத்தை எதிர்நோக்கி இல்லாமலும், பிற எரிபொருளான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் செலவின்றியும்ம் சூரிய சக்தியை பயன்படுத்தி விவசாயிகள் பம்பு செட்டை இயக்கி நீர்ப்பாசனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தற்போது விவசாயிகளிடையே சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், தமிழக அரசு நடப்பாண்டில் இந்த வகை மோட்டார் பம்பு செட்களை மாநில அளவில் 10,00,00 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்க உள்ளது.
இலவச மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்பு பட்டியலில் இருந்து தங்களை நீக்கிக் கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கெனவே இலவச மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், சூரிய சக்தி பம்பு செட் கிடைத்தால் தங்களுக்கு இலவச மின்சார துண்டிப்பு செய்ய சம்மதம் அளிக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மின்வாரியம் மூலம் வழங்கப்படும் 30 சதவீத மானியத்தையும் சேர்த்து 90 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்துத் தரப்படும்.
இத்திட்டத்தின் கீழ் சோலார் பம்பு செட் அமைக்க விரும்பும்
என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தையும் நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
முழுமையான தகவலுக்கு Click Here