NID Recruitment 2020: நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டிசைன் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.
NID Recruitment 2020National Institute of Design: NID என்று சுருக்கமாக அழைக்கப்படும், நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டிசைன் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டிசைன் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து ஏப்ரல் 17 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளது. அவை:
சீனியர் டிசைனர் – 2,
அசோசியட் சீனியர் டிசைனர் – 2,
பிரின்சிபல் டெக்னிக்கல் இன்ஸ்ட்ரக்டர் – 1,
சீனியர் டெக்னிக்கல் இன்ஸ்ட்ரக்டர் – 1,
டிசைனர் – 4,
சீனியர் டிசைன் இன்ஸ்ட்ரக்டர் – 1,
அசோசியட் சீனியர் டெக்னிக்கல் இன்ஸ்ட்ரக்டர் – 1,
அசோசியட் சீனியர் டிசைன் இன்ஸ்ட்ரக்டர் – 1,
டிசைன் இன்ஸ்ட்ரக்டர் – 1,
டெபுட்டி இன்ஜினியர் – 1,
அசிஸ்டெண்ட் இன்ஜினியர் – 1 ஆகும்.
முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 17 ஏப்ரல் 2020
ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 17 ஏப்ரல் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 மே 2020
ஒவ்வொரு பதவிக்கும் உள்ள கல்வித்தகுதி, பணி அனுபவம், ஊதிய விகிதம் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், http://www.nidmp.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, ஆன்லைனில் மே 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு NID கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
https://www.nidmp.ac.in/Upload/NIDMP_RecruitmentTech.pdf