1. இலவசமாக இரண்டு மடங்கு வரையில் அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை தங்குதடையின்றி வழங்குவது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் அதன்பிறகு அமைச்சர் காமராஜ் அவர்கள் சார்பில் அறிக்கை வெளியிட்டார் அதில் கூறப்பட்டிருப்பதாவது.
ஏப்ரல் முதல் ஜூன் உடைய பிஹர்ஸ்ஸ் மற்றும் முன்னுரிமை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலை இல்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் அரிசி விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருவதால் முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள் உட்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு அரிசி விலை இல்லாமல் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார் இதற்காக அரிசியை 1கிலோகு22 ரூபாய் வீதம் இந்திய உணவு கழகத்தில் இருந்து கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 438 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
எந்தெந்த குடும்ப அட்டைக்கு எவ்வளவு கூடுதல் அரிசி வழங்கப்படும்?
இதற்குமேல் யூனிட்டுகள் அது ஐந்து வருடத்திற்கு மேல் இருக்கக் கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் வாங்கும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் இவ்வாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி 50 சதவீதம் மே மாதத்திலும் மீதமுள்ள 50% ஜூன் மாதத்திலும் அந்த மாதத்திற்கான அளவுடன் சேர்த்து வழங்கப்படும் என்பதற்கான அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது இதைத் தவிர ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும் அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்று நடப்பு மே மாதத்தில் விலையில்லாமல் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் மேற்கண்டவாறு விலையில்லாமல் சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்குவதற்காக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 184.31 கோடி வீதம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூடுதலாக ரூபாய் 368 . 2 கோடி முதல்வர் உத்தரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு விலையில்லாமல் வழங்கப்படும் அரிசி சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் இன்றி சமூக இடைவெளியை கடைபிடித்து விலையில்லாமல் பெற்று கொள்ள ஏதுவாக நாளொன்றுக்கு 700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் வகையில் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு கடந்த 2 5 2020 மற்றும் 3 5 2020 ஆகிய நாட்களில் வீடு வீடாக சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளை பணியாளர்கள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது 4 5 2020 முதல் இந்த பொருட்கள் அனைத்தும் நியாய விலை கடை களிலும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது மேலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர்கள் அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இதனால் மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன இதைத் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களின் வளைவினை முறைப்படுத்தவும் உயர் அதிகாரிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து பொதுமக்கள் நாம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனங்களில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து வைத்து வங்கிகள் மூலம் கடன் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
2. தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொருட்கள் ரேஷன் கடையில் சமூக இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு 200 நபர்கள் வீதம் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூபாய் 500க்கு விற்பனை ஆகும் இதன் மூலம் பொதுமக்களுக்கு ரூபாய் 105 மிச்சப்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
3. அறிவிப்பு மஞ்சள் நிற ரேஷன் அட்டை எனக்கு ஒரு வாரத்தில் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் தற்போது ரேஷன் கடைகளின் மூலம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது அடுத்த வாரத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அரசியல் வழங்குவதற்கு கோப்புகளை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் அரசி வழங்குவதற்கு மத்திய அரசிடமிருந்து ரூபாய் 10 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.